வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் உத்தரவாதம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி நிலைமைய வலுப்படுத்தவும், 24 மணி நேர தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குதல் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை இதனூடாக சீர்செய்ய முடியுமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜுலை முதலாவது வாரத்தில் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கும் வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே நாட்டில் இன்று திங்கட்கிழமைமுதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என தொழிற்சங்க பிரதிநிதி ஆனந்த பாலித கூறியுள்ளார்.
எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், இன்று முதல் பாரிய மக்கள் வரிசை காணப்படும் என்றும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
95 வீதமான மக்கள் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்யத் தவறினால் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆனந்த பாலித எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|