வாரமொன்றுக்கு 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர் – தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தகவல்!
Sunday, September 25th, 2022ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாவதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பெருமளவான தொடருந்து விபத்துக்கள் பயணிகளின் கவனயீனத்தால் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொடருந்து மிதிபலகையில் பயணிப்பதால் அதிகளவான விபத்துக்கள் நிகழ்கின்றன.
தொடருந்து பயன்பாடு மற்றும் குறுக்கு வீதிகள் ஊடாக பயணிக்கும் போது தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன பயணிகளை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிறுப்பிட்டியிலிருந்து நவீன அரிசி ஆலை மருதங்கேணிக்கு மாற்றம்!
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீடு...
தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பது குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணம் -...
|
|