வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, July 20th, 20222022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது.
அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதிமுதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், திங்கட்கிழமைமுதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில், அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், குறித்த திகதியினை ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|