வாரத்தில் மூன்று தடவை யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
Friday, March 18th, 2022வாரத்தில் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ் நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது, வாரத்தில் இரண்டு தடவைகள் கொழும்பிலிருந்து ஆத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்ற போதிலும், அவை போதியளவாக இல்லை என்று வர்த்தக அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர், வாரத்தில் மூன்று தடவைகள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
000
Related posts:
புதிய வாகன அபராத கட்டண பட்டியல் அடுத்தவாரம்!
புதிய ஒப்பந்தம்: ஐரோப்பாவுக்கான பயணத்தை விஸ்தரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
சதொச வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுதலை!
|
|