வாரத்தில் புகைத்தலினால் சுமார் 400 பேர் உயிரிழப்பு!
Tuesday, May 14th, 2019நாட்டில் புகைத்தலினால் வாரத்தில் சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது வாகன விபத்து, தற்கொலை, எயிட்ஸ் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் விட கூடுதலானதாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புகைத்தலால் உயிரிழக்கும் மற்றும் நோய்களுக்கு உள்ளாகும் நபர்களுக்காக சுமார் 300 பில்லியன் ரூபா வருடாந்தம் செலவிடப்படுகின்றது. இருப்பினும், வரியின் மூலம் வருடாந்தம் கிடைக்கும் பணத்தின் தொகை 80 பில்லியன் ரூபா என்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Related posts:
நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை!
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வெளிநாடுகளில் இருந்து மேலும் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!
|
|