வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று – தொடர்ந்தும் 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்!

Monday, November 8th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

கொரோன பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் உரிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கமைய அரசங்கத்தினால் முடியாமல்போன 50 கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பம் இன்றையதினம் வழங்கப்படவுள்ளாதாகச் சபை முதல்வர் காரியாலயம் தெரிவித்திருந்தார்..

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான விசேட தெரிவுக்குழு கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகச் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 40 கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக இதற்கு முன்னர் கடந்த மாதம் 4 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது

அதேநேரம், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, இன்றுமுதல் தொடர்ந்தும் 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 60 வயதிற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொவிட் செயலூக்கி இன்றையதினம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: