வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, May 8th, 2019

கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அநேகமான பிரதேசங்களில் நாளை வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிபபிட்டுள்ளது.

இதன் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இந்த வெப்பமான காலநிலை காரணமாக உடல் வறட்சி, உடல் சோர்வு, தோலில் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது

Related posts: