வானிலை தொடர்பில் எச்சரிக்கை – வானிலை அவதான நிலையம்!

Wednesday, December 12th, 2018

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக தொடர்ந்தும் வலுவடைந்து வருவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த தாழமுக்கமானது வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றுமம் கடலில் பயணம் செய்வோர் அவதானமாக இருக்குமாறு அந்த நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts: