வானிலிருந்து வீழ்ந்த மர்மத் திரவத்தின் பாதிப்பால் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 18 பேர் வைத்தியசாலையில்!

Friday, July 21st, 2017

வானத்தில் இருந்து வீழந்த ஒருவகையான மர்மத்  திரவத்தால் பாதிக்கப்பட்டு 18 மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 18 பேரே இவ்வாறு மர்ம திரவத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

மதிய நேர இடையேவளையின்போது மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மைதானத்தில் நின்றிருந்த சமயமே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மஞ்சள் நிற திரவமொன்று வானிலிருந்து வீழ்ந்ததாகவும்  பாடசாலை மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: