வாடிகளிற்கு தீ வைப்பு : 35 லட்சம் நட்டம்!

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழ் மீனவர்களின் வாடிகளிற்கு தீ வைத்தமையினால் 35 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களிற்கு இது குறித்த கணிப்பீட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் தமிழ் மக்களின் வாடிகளிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தினால் 8 வாடிகள் முற்றாக அழிவடைந்தன. இதனால் 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழிலுக்கு இன்னும் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் 3 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக முல்லைத்தீவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்து குறித்து பயணிகள் குற்றச்சாட்டு!
தேங்காய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி!
யாழ் தொழில் நுட்பவியல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்!
|
|