வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு கட்டுப்பாடு – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பு!

Wednesday, April 22nd, 2020

வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிகளுக்கு மேலதிகமாக இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் .இந்த புதிய கட்டுப்பாடு தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார் என கூறப்படுகின்றது.

பொது பயணிகள் சேவைகளை செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ள அவர் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்கும் வகையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் சில மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது என்றும் இதன்போது பொது பயணிகள், சேவைகளின் பாதுகாப்பு முறை தொடர்பில் கருத்திற் கொள்ளாமல் செயற்பட்ட சம்பவங்கள் கண்காணிப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதனை கருத்திற்கொண்டே இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்

Related posts: