வாசிப்பு பழக்கம் அருகி வருகிறது – யாழ்ப்பாண பொது நூலக பிரதம நூலகர்!

Wednesday, January 11th, 2017

 “யாழ். பொது நூலகத்தின் சிறுவர் பகுதியின் புதிய அங்கத்தவர் எண்ணிக்கையும் வாசகர்கள் எண்ணிக்கையும் கடந்த வருடம் குறைவடைந்துள்ளது. சிறுவர் பகுதியில் 2015 இல் 163 ஆக இருந்த புதிய அங்கத்தவர்களின்  எண்ணிக்கை 2016 இல் 130 ஆக குறைவடைந்துள்ளது. அதேபோல் சிறுவர் பகுதியில் வாசகர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

2015 இல் 4,250 ஆக இருந்த வாசகர் எண்ணிக்கை 2017 இல் 4,175 ஆக குறைவடைந்துள்ளது” என  யாழ்ப்பாண பொது நூலக பிரதம நூலகர் திருமதி எஸ்.சதாசிவமூர்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் புதிய அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர். யாழ். பொது நூலகத்தில் புதிய அங்கத்தவர்களின் எண்ணிக்கை  2016 ஆம் ஆண்டு அதிகரித்துள்ள போதும் சிறுவர் பகுதியில் மட்டும் இணைந்தோரின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகின்றது.

இரவல் வழங்கும் பகுதியில் 2015 ஆம் ஆண்டு 216 அங்கத்தவர்கள் இணைந்துள்ளபோதும் 2016 இல் 263 ஆக  உயர்ந்துள்ளது. தகவல் வழங்கும் பகுதியில் 2015 ஆம்  ஆண்டில் 2357 ஆக இருந்த புதிய  அங்கத்தவர் எண்ணிக்கை 2016 இல் 2894 ஆக  உயர்ந்துள்ளது. உசாத்துணைப்பகுதியில் புத்தகங்களை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 2015 இல் 15,172 ஆக இருந்த தொகை 2016 இல் 22,661 ஆகவும் அதிகரித்து உள்ளது. இரவல் வழங்கும் பகுதியில் புதிய  அங்கத்தவர்களின் எண்ணிக்கை 2015 இல் 216 ஆக காணப்பட்ட போதும் 2016 இல் 263 ஆக உயர்வடைந்துள்ளது.

ஆனால்  சிறுவர் பகுதியில் 2015இல் 163ஆக இருந்த புதிய அங்கத்தவர்களின்  எண்ணிக்கை 2016 ல் 130 ஆக குறைவடைந்துள்ளது. அதேபோல் சிறுவர் பகுதியில் வாசகர்களின்  எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. அதாவது 2015இ ல் 4250 ஆக இருந்த வாசகர் எண்ணிக்கை 2016 இல் 4175 ஆக குறைவடைந்துள்ளது. எனவே இளைய சமுதாயத்திடம் அருகிவரும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

44_big

Related posts: