வாசகர்களுக்கு EPDPNEWS.COM இணையத்தளத்தின் தீபாவளி வாழ்த்துக்கள்!

Wednesday, October 18th, 2017

நரகாசுரனை கொன்றமைக்காக வருடாவருடம் கொண்டாடப்படும் தீபாவளி தினத்தில் மக்கள் மனங்களிலும் உள்ள எதிர்மறை எண்ணங்களும் சுயநலன்களும் அழிக்கப்படு இனிமையும் ஐக்கியமும் நிறைந்த எதிர்காலத்ததை உரவாக்க இத்தீபத்திரநாள் வழிகொலவேண்டும் என்பதே என்பதே எமது வாசகர்களுக்கு EPDPNEWS.COM  இணையத்தளத்தின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தீபாவளி திருநாளில் தீபங்களை வரிசையாக ஏற்றி தீபஒளி ஏற்றப்படுவதும்கேளிக்கை கொண்டாடங்களில் ஈடுபடுவதும் மக்களின் வழமையான நிகழ்வகளாக காலாகாலமாக தொடர்ந்துவருகின்றன.

அந்தவகையில் இந்துக்கள் தம்மத்தியில் உள்ள குரோத சுயநல ஜாதிபேதம் பிரதேசவாதம் போன்ற விட்டகலா அரக்கர்களை அழிப்பதன் மூலம் இலங்கைத்தீவில் ஏக்கத்துடன் காத்திருக்கும் நல்லிணக்கத்தையும் நிரந்தர அமைதியையும் ஏற்படுத்திக்கொள்ள உதவும்.

இன்றையநாளில் பொதுநலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்து தீபாவளி வரும்போது அதன் அறுவடையை மக்கள் உணரச்செய்யும் நிலை ஏற்படவேண்டும்.இதனூடாகவே நரகாசுரனை கொன்றொழித்து மக்களை காப்பாற்றியதை விட உண்மையான விடுதலையை அடைந்துவிடமுடியும்.
இன்றையதினம் தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எமது இணையத்தளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Related posts: