வாக்கெடுப்பின் மறுநாள் வாக்கெண்னும் பணிகளை நடத்த தீர்மானித்துள்ளதால் பொது மக்கள் மத்தியில் சந்தேகம் எழக்கூடும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

Monday, August 3rd, 2020

கொரோனா பரவல் காரணமாக தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வாக்கெடுப்பின் மறுநாள் வாக்கெண்னும் பணிகளை நடத்த தீர்மானித்துள்ளதால் பொது மக்கள் மத்தியில் சந்தேகம் எழக்கூடும். அவ்வாறு சந்தேகிப்பதற்கான அவசியமில்லை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை தெரிவித்ததுள்ளார்.

வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குபெட்டி பூட்டினால் மூடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் தயாகிக்கப்பட்ட இரகசிய குறியீடுகொண்ட நாடா ஒட்டப்பட்டு அதன் பின்னர் வாக்கெண்ணியோரின் விபரங்கள் அடங்கிய ஆவணம் பெட்டியின் மேல் ஒட்டப்படும்.

அதனைத் தொடர்ந்து பொலித்தீன் பையொன்றில் பெட்டியை இட்டு இரகசிய எண் கொண்ட நாடாவால் பொதியிடப்படும். இந்த படிமுறைகளை மீறி வாக்குபெட்டிகளில் எவராலும் வாக்குசீட்டுக்களை சேர்க்கவோ அல்லது மாற்றவோ முடியாது.

வாக்கெண்னும் நிலையங்களுக்கு அரசியல் கட்சிகள் அல்லது சுயாதீன குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தலா இருவர் மாத்திரமே வருகை தர முடியும் என்றார்.

Related posts: