வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, August 4th, 2020

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

இதற்கமைய குறித்த பணிகள் இன்றுகாலை 8 மணிக்கு ஆரம்பமாகியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2020 பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, நாளை வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: