வாக்குகள் எண்ணும் நிலையங்களில் மின்விநியோகத்தை உறுதிப்படுத்தவும்!
Wednesday, February 7th, 2018
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலின்போது ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் இடையறாத மின்சார மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக மின் தடை ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்குரிய முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலர்களுக்கும் யாழ்ப்பாண உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் பணிப்புரைகளைச் செய்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் அவசரகால மின் விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி பணிப்புரை செய்யப்பட்டிருக்கின்றது. வாக்கெண்ணும் மற்றும் பெறுபேறுகளை வெளியிடும் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் விடயம் சார்பாக கடந்த 24 ஆம் திகதி கிராம அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு மேலதிகமாக வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாடகை அடிப்படையில் மின் பிறப்பாக்கிகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கான கொடுப்பனவுகள் எதுவும் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்படமாட்டாது என்று அறியத்தரப்பட்டுள்ளது.
எனினும் மேற்படி நிலையங்களுக்கான இடையறாத மின்சார வசதி வழங்கப்படுவதனை இலங்கை வலய அலுவலகங்களுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்வதுடன் மின்சார தடங்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதனை நிவர்த்தி செய்வதற்கான சார்ச்சர் லைட் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.
இது பற்றி கிராம அலுவலர்களுக்கு தெரியப்படுத்துமாறு உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர் எஸ்.ரகுநாதன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|