வாக்குகளை எண்ணுவதில் புதிய முறை!

Sunday, September 3rd, 2017

புதிய முறையின் கீழ் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் வாக்குகள், வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படும் என கூறப்பட்டுள்ளது.

குறைந்த வாக்கு எண்ணிக்கையை கொண்ட வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தூர இடங்களில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகளின் பெட்டிகள் ஓரிடத்திற்கு கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குகளை எண்ணும் வாக்களிப்பு நிலையங்களில் பிரதான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதுடன் தேர்தல் முடிவுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தொகுதி மட்டத்திலான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணைக்குழு மூலம் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே தபால் மூல வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது. அவை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு பெட்டிகளில் போடப்பட்டு ஒன்றாக எண்ண தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

Related posts: