வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பம் – மதிய தேநீர் வேளையின் போது முதலாவது தேர்தல் முடிவு வெளிவரும் – மஹிந்த தேசப்பிரிய!

Monday, July 27th, 2020

ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் ஆறாம் திகதி மாலை வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2020 நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு ஐந்தாம் திகதி காலை ஏழு மணிமுதல் மாலை ஐந்து மணிவரை இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து, வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஆறாம் திகதி மாலை முதலாவது முடிவை அறிவிக்க எண்ணியுள்ளோம் என்றும் அனைத்தும் திட்டமிடப்பட்டபடி நடைபெற்றால் மதியதேநீர் வேளையின் போது முதலாவது முடிவு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: