வாக்காளர் பெயர் பதிவு படிவங்களை ஜீலை மாதம் ஒப்படைக்க வேண்டும்!

Thursday, June 14th, 2018

வாக்காளர் பெயர் பதிவுப் படிவங்களை ஜீலை மாத நடுப்பகுதிக்குள் கிராம அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட செயலக தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

பல்வேறு தேர்தல்கள் காலத்துக்கு காலம் நடைபெற்று வருகின்றன. வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து செல்கின்றனர். 18 வயதை உடையவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். ஆகவே அவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம்.

அத்துடன் வாக்களிக்கும் நபர் ஒருவர் புதிதாக திருமணம் ஆகிய நிலையில் வேறொரு கிராம அலுவலர் பிரிவில் அல்லது வேறு ஒரு முகவரியில் வசிக்கலாம். இறந்திருக்கலாம்.

ஆகவே அவர்களின் பதிவுகள் சரியான முறையில் அமைந்தாலே வாக்களிக்க முடியும். இதனை கருத்தில்கொண்டு கிராம அலுவலர்களிடம் பெயர் பதிவு படிவம் வழங்கப்பட்டது.

இந்த படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்களிடம் இருந்து படிவங்கள் நிரப்பப்பட்டு கிராம அலுவலர்கள் அதனை சேகரித்து மாவட்ட தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும். கடந்த மே மாதம் இந்த படிவங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

அவற்றை சேகரித்து ஜீலை மாத நடுப்பகுதிக்குள் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு ஒப்படைக்க வேண்டும். கடந்த 10 ஆம் திகதி முதல் இந்த படிவங்கள் நிரப்பப்பட்டு கிராம அலுவலர் மூலம் கிடைக்கப்பெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: