வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

இந்த ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று(15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கிராம சேவகர்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய பிரதம நீதியரசர் நியமிப்பு இன்று!
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் ...
13 - 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|