வாக்காளர் பட்டியலில் இருந்து 37 பெயர் நீக்கம்!

Thursday, June 28th, 2018

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 37 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த 37 பேரும் தற்போது சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பதால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 31 பேர் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக மூன்று பொலிசாரினதும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இரண்டு பேர் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் இருந்து ஒருவர் என்று வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது.

Related posts: