வாக்காளர் தினம் இன்று!

Wednesday, June 1st, 2016

உலக வாக்காளர் தினமானது ஜீன் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. ஜனநாய உரிமையுள்ள ஒவ்வொரு நாட்டிலும் வாக்காளர்களின் பங்கு மிக உன்னதமாக போற்றப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஜனநாய நாடான இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகள்அனைவரும் வாக்காளராக கொள்ளப்படுகின்றனர்.

வாக்காளன் ஒருவனுக்கு தனிப்பட்ட உரிமைகள் பல உண்டு, அவ்வாறான உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற தினமாக இத்தினம் கொள்ளப்படல் வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.

வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை மூலம் நாட்டின் ஒவ்வொரு அங்கத்துவத்திலும் எம்மை இணைத்துக்கொள்ள முடியும்.

தேர்தல்கள் திணைக்களத்தினால் வாக்காளர் தினம் நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்பட இருக்கின்றது.

Related posts: