வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் கிடைக்காதோர் கிராம அலுவலருடன் தொடர்பு கொள்ளவும் – தேர்தல் திணைக்களம்!

Sunday, June 3rd, 2018

2018 வாக்காளர் கணக்கெடுப்புக்கான படிவங்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் படிவங்கள் கிடைக்காதவர்கள் கிராம அலுவலரிடம் தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் கோரியுள்ளது.

இது குறித்து தேர்தல் திணைக்களம் தெரிவிக்கையில் 2018 வாக்காளர் கணக்கெடுப்புக்கான படிவங்களை எதிர்வரும் ஜீன் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் சகல வீடுகளுக்கும் கிராம அலுவலர்கள் அல்லது விசேட கணக்கெடுப்பு அலுவலர்கள் விநியோகிக்கவுள்ளனர்.

கணக்கெடுப்பு படிவமொன்று கிடைக்கப்பெறவில்லையெனின் உங்கள் பிரிவு கிராம அலுவலரிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்துடனோ தொடர்புகொள்ள வேண்டுமென வாக்காளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிடைக்கும் கணக்கெடுப்பு படிவத்தை ஜீலை 31 ஆம் திகதிக்கு முன்னர் முறையாகப் பூர்த்தி செய்து கிராம அலுவலரிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ கையளிக்க முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: