வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் மார்ச் முதல் ஆரம்பம்!

Tuesday, February 19th, 2019

இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகளை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்க தயாராகி வருவதாகவும் இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவருக்கு இது தொடர்பில் தொடர்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஷிக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர், கிராம உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தி, வாக்காளர்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் தினம் மற்றும் ஏனைய தினங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

2018ம் ஆண்டு உறுதி செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பு நடைபெறவுள்ள தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விசாரணைகளை விரிவுபடுத்தாது மறியலை நீடிப்பது சரியானதன்று - பொலிஸாருக்கு கடுந்தொனியில் நீதிவான் எச்சர...
சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் - சுகாதார ச...
இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் - பேராசிரியர் நீலிகா மலவ்கே எச்சரிக்கை!