வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, November 1st, 2021

வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

WWW.SLELECTION.GOV.LK எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து வாக்காளர் இடாப்பு பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சேவை இலவசமாக வழங்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: