வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்!

Friday, February 9th, 2018

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளார் மொஹமட் தெரிவித்தர். வாக்காளர் அடையாள அட்டை மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெயர் இருக்குமாக இருந்தால் ஆள் அடையாளத்தை நிருபிக்கும் ஆவணத்துடன் சென்று வாக்களிக்க முடியும் .வாக்காளர் அட்டை இல்லாமல் சென்று வாக்களிப்பதற்கு நேரம் செலவிட வேண்டியிருக்கும் வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெயரைத்தேடி கண்டுபிடிக்க நேரம் செலவாகும் ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாம் சென்றும் வாக்களிக்க முடியும் -என்றார் .

Related posts: