வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம் நிறைவு – தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

Friday, July 24th, 2020

பொதுத் தேர்தலுக்கான  வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம்  நிறைவடைந்துள்ளதாக  தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரையில் 110 இலட்சத்து 26 ஆயிரத்து 558 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாகவம்   இவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொது மக்கள் குறித்த காலப்பகுதியில் வீடுகளில் இருக்குமாறும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: