வாக்காளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமானது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, July 20th, 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாய தேவைப்பாடாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் – நாட்டில் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் ஒரு கட்டாய தேவைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வாக்காளர்கள் வாக்களிக்கும்போது, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரசாங்க சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: