வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஹீ ரத்நாயக தெரிவிப்பு!

Monday, September 4th, 2023

யாழ் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே தேர்தல் அலுவலகம் அமைப்பு செயற்பட வேண்டும்  என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஹீ ரத்நாயக தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்தக் கட்டடமானது நான்கு மாடிக்கான திட்டமாக  இருந்தாலும் பொருளாதார நெருக்கடியால் ஒரு மாடிக் கட்டடமாக  மட்டுப்படுத்தப்பட்டது.

கச்சேரியில் அரச அதிபரின் கீழ்   தேர்தல் செயற்பாடுகள் சிறப்பாக உள்ள போது ஏன் தனியான அலுவலகம் வேண்டும் என்ற கேள்வி எழுந்தது தேர்தல் காலங்களில் அதிகளவான இடம் தேவைப்படுவதால் தான் இவ் அலுவலகததிற்கான தேவை காணப்பட்டது.

யாழ் மாவட்டத்தினுடைய வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே இக் கட்டடத்தின் அமைவு அமைந்துள்ளது.  மக்ளின் வாக்குரிமையைப்  பாதுகாப்பதற்காக ஏனைய அனைத்து சிவில் அமைப்புக்களையும் இணைத்து பணிபுரியுமிடமாக இவ்விடம் செயற்பட வேண்டும்.  எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வறட்சியின் தாக்கமும்  யாழ் மாவட்டம் முகம்கொடுக்கும் சவால்களும்:    ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்ஆ ராய்...
இணைய வசதிகளுடன் கொழும்பு நகரை இணைக்கும் புதிய பேருந்து சேவையை ஆரம்பித்துவைக்கிறார் ஜனாதிபதி!
கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் பிரச்சினை - உர இறக்குமதியில் தாமதம் என தேசிய உர செயலகம் தெ...