வாக்களிப்புக் கால நீடிப்பு உள்ளிட்ட பல்வேறு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அறிவிப்பு!

Friday, June 26th, 2020

நாடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து.

அதனடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராயப்படவுள்ளது.

இதன்போது மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கலந்துரையாடலின்போது எட்டப்படவுள்ள தீர்மானங்களுக்கு அமையவே தேர்தல் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: