வாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை – பாதுகாப்பு அமைச்சு !

எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ வாக்களிப்பதைத் தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சேவையில் ஈடுபட்டுள்ளவர்களோ அல்லது ஓய்வுபெற்ற பாதுகாப்புத் தரப்பினரோ அல்லது காவல்துறை அதிகாரிகளோ தங்களது சீருடையில் இருக்கும் புகைப்படங்களை பயன்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், கட்சியினதோ அல்லது வேட்பாளர்களினதோ காரியாலயங்களில் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதற்கமைய, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்ததலை நடத்துவதற்கு இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் பக்கச்சார்பற்ற முறையில் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|