வாக்களிப்பதற்கு விடுமுறை அளிப்பது அவசியம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

வாக்களிப்பதற்காக கோரிக்கை விடுக்கும் எந்தவொரு நபருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் சேவை செய்யும் இடத்தில் இருந்து வாக்கு சாவடி உள்ள தூரத்தின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
40 கிலோ மீற்றருக்கு குறைவாயின் அரை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோ மீற்றர் இருப்பின் ஒரு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் 100 முதல் 150 கிலோ மீற்றர் தூரமாயின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோ மீற்றருக்கு அதிகமாயின் இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
உண்மைக்குப் புறம்பான விடயங்கள்: யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவிடம் இலங்கை கோ...
இந்திய முதலீட்டாளர்கள் குழு அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - நண்டு வளப்பில் வருமானத்தை அதிகரிக்கச் செய்யு...
|
|