வாக்களிக்க விசேட தேவைகளை உடையவர்களுக்கு வசதிகள்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பார்வையை இழந்தவர்களும் மாற்றுத் திறனாளிகளும் வாக்களிப்பதற்காக வேறு ஒருவரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவர்களுக்கு 18 வயதை பூர்த்தி செய்தவர் உதவியாளராக இருப்பதுடன் அவர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் கட்சியின் அங்கீகாரம் பெற்ற முகவராகவோ வாக்குச் சாவடிக்கான பிரதிநிதியாகவோ இருக்கவும் கூடாது. உதவியாளரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்குஉரிய காரணங்கள் சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான விண்ணப்பப்படிவங்களை கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணைத்தளத்திலிருந்தும்பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Related posts:
ஜனாதிபதியின் முக்கிய கோரிக்கை!
உயர்தரப் பரீட்சை குறித்து எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை - கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - வெளியானது விசேட வர்த்தமானி!
|
|