வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, June 13th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்களிப்பிற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிசித்துள்ளார்..

அத்துடன் முகக் கவசம் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைத் தரும் வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகளுக்கு முகக் கவசத்தை கழற்றி முகத்தை காண்பித்து பின்னர் முகக் கவசத்தை அணிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் கட்டாயமாக முகக் கவசத்தை அணிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்

மேலும், வாக்காளர்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது அடையாளஅட்டைகளை அதிகாரிகள் தமது கைகளில் பெற்றுக்கொள்ளாத அதேவேளை, வாக்காளர்களினால் அதிகாரிகளுக்கு அவற்றை காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: