வாக்களிக்கும் உரிமை சட்டம் தேவை – மஹிந்த தேசப்பிரிய!

18 வயது நிரம்பியவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் போது, 19 வயதிற்கு பின்னரே பலர் வாக்களிக்கும் வாய்ப்பை பெறுவதாக தெரிவித்துள்ள அவர் இனிவரும் காலத்தில் 18 வயதிலேயே வாக்களிக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வருடத்திற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இச் செயற்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல்போனோர் சான்றிதழ் வருட இறுதிக்குள் - அரசாங்கம் !
6000 அரச பணியாளர்கள் தேர்தல் கடமைகளில்!
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிப...
|
|