வாக்களிக்கத் தகுதியிருந்தும் பதிவுகளை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக பதிவுசெய்ய வேண்டியது அவசியமானது!

வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாக்காளர் பதிவுப் பத்திரங்கள் இதுவரை கிடைக்கப்பெறாமலும்இ வாக்களிக்கத் தகுதியிருந்தும் பதிவுகளை மேற்கொள்ளாமலும்; இருப்பவர்கள் உடனடியாக தமது பகுதிக் கானகிராம சேவையாளர்களிடம் பதிவு செய்யவேண்டியது அவசியமானது. எனவே இதுவிடயத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பை உணர்ந்துகொண்டு துறைசார்ந்தவர்கள் செயற்படமுன் வரவேண்டும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்துள்ளார்.
வாக்காளரை பதிவுசெய்வதற்கு தகுதியுள்ள எவரையும் தவிர்த்துவிடாமல் அனைவரையும் பதிவுசெய்யும் வகையில் 2016 ஆம் ஆண்டுக்கான பதிவுகளைத் திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர்அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் யுத்தசூழல் காரணமாக கடந்த காலங்களில் மக்கள் தமது இருப்புக்கான நிலையே கேள்விக் குறியான நிலையில் வாக்காளர் பதிவேடுகளில் தமது பதிவுகளை உரியமுறையில் மேற்கொள்ள முடியாத அவல நிலை எதிர்கொள்ளப்பட்டிருந்தது.
யுத்தம் முடிவுக்கு வந்து இயல் புநிலை திரும்பிவரும் நிலையில் வாக்களிக்கத் தகுதியிருந்தும் பதிவுகளை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக தமது பகுதிக்கான கிராம சேவையாளர்களிடம் பதிவுசெய்யவேண்டியது அவசியமான செயற்பாடாகவுள்ளது.
குறிப்பாக எமது மக்கள் இன்றும் கூட நலன் புரிமுகாம்களிலும். உறவினர்இ நண்பர்களின் வீடுகளிலும்இ வாடகை வீடுகளிலும் வாழ்ந்துவரும் நிலையில் தாம் வசித்துவரும் குறித்த முகவரிகளின் கீழ் வாக்காளர் பதிவேடுகளில் பதிவு செய்துகொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருப்பதற்கமைவாக மக்கள் பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறாகஇ கிடைக்கப்பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தைமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி வாக்காளர் பதிவுப் பத்திரங்கள் இதுவரை கிடைக்கப்பெறாமலும்இ வாக்களிக்கத் தகுதியிருந்தும் பதிவுகளை மேற்கொள்ளாமலும்; இருப்பவர்கள் உடனடியாக தமது பகுதிக்கான கிராமசேவையாளர்களிடம் பதிவுசெய்யவேண்டிய அவசியமானது. எனவே இதுவிடயத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பை உணர்ந்துகொண்டு துறைசார்ந்தவர்கள் செயற்பட முன்வரவேண்டும்.
வாக்களித்தல் என்பது தமது ஜனநாயக உரிமை என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் துறைசார்ந்தவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானதென்பதையும் எமது மக்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில் இந்த வாய்ப்பினை மக்கள் உரிய முறையிலும்இ சரியாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
இதனிடையே கிராம சேவையாளர்களிடம் உரியமுறையில் பதிவுசெய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லையெனில் தாம் தெரிவுசெய்த மக்கள் பிரதிநிதிகளினூடாக மக்கள் தமது பதிவுகளை மேற்கொள்ளமுடியுமென்றும் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|