வாகன வேகத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் போக்குவரத்து டம்மி பொலிஸார்!

Monday, July 2nd, 2018

போக்குவரத்துச் சட்டங்களை மீறி வேகமாகப் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கச் செய்வதற்குப் பொலிஸார் புதிய உத்தி ஒன்றைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவில் உள்ள நெடுஞ்சாலையில் பொலிஸ் அதிகாரிகளைப் போன்ற உருவப் பதாதைகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.

புத்தளம் பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவிற்கமைய புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கிரியன் கல்லியில் இருந்து கரிக்கட்டி வரையான வீதியில் இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளைப் போன்ற உருவப் பதாகை பொருத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதனை பார்த்தால் வேகத்தைச் சோதிக்கும் கருவியை ஏந்தியபடி வீதியை நோட்டமிட்டுக்கொண்டு பொலிஸ் அதிகாரிகள் நிற்பது போன்று தோன்றுவதனால் வாகனங்களின் வேகம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.