வாகன விபத்து – கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் பலி!

கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதில் பாதசாரிகள் மூவரும் , உந்துருளி செலுத்துநர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
சாரதிகளுக்கு ஏற்படும் நித்திரைக் கலக்கம், உடல்நலக் குறைவு, மது அருந்தியிருத்தல், கவனயீனம் மற்றும் வீதியின் குறைப்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல் வாகனங்களை செலுத்துதல் என்பன அண்மைக்கால வாகன விபத்துக்களுக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விலை சீர்திருத்தம் !
உயர் நீதிமன்ற கட்டடத்தில் தீ !
சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் - வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் ப...
|
|