வாகன விபத்துக்கள் அதிகரிப்பு – கடந்த 10 நாட்களில் 45 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

கொரோனா நிலைமையால் இலங்கை முடங்கியிருந்த போது வாகன விபத்துக்களும் குறைவடைந்திருந்ததாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு நாடு திறக்கப்பட்ட பின்னர் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் கடந்த 10 நாட்களில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த 10 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களில் இளைஞர்களே அதிகமாகவுள்ளனர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வட்டுக்கோட்டை பொலிஸாரால் இருவர் கைது!
தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க நடவடிக்கை!
அடுத்த இரண்டு வாரங்களில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் ...
|
|