வாகன விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை : வடமாகாண ஆளுநர் கூரே!

Thursday, November 22nd, 2018

வடக்கில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ரயில் தண்டவாளங்களில் அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் சாரதிகளின் கவனயீனமாகும்.

சுரேதிகள் உரிய வகையில் சமிக்ஞையை பின்பற்றி கடவையை கடக்கும் நிலையில் விபத்துக்களை தவிர்க்க முடியும். இவ்வாறான நிலையில் விபத்துக்களும் அதிகரித்துள்ளன. எனவே விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. இதேவேளை ரயில் கடவையில் ஏற்படும் விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணமென ரயில்வே தரப்பினர் தெரிவித்தனர்.

Related posts: