வாகன வருமான வரியை இணையத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்!

Sunday, December 24th, 2017

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட இலத்திரனியல் வாகன வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்திட்டத்தின்படி வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பதிவுடைய வாகனங்களுக்கும் வருமான வரியைப் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாணப் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் சி.சுஜீவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

பிறமாகாணங்களைச் சேர்ந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் இலத்திரனியல் செயல்திட்டத்தின் கீழ் அவர்கள் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கமுடியும்.

இதன்மூலம் 14 நாள்கள் வலிதான தற்காலிக வாகனவரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடிவதுடன் பின்னர் வாகனம் பதிவிலிருக்கின்ற மாகாணத்துக்குரிய மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அலுவலகத்தால் வாகனம் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தின் மூலப்பிரதி காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இலத்திரனியல் முறை மூலம் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக் கொள்ளமுடியும் என்றார்.

Related posts: