வாகன புகைப்பரிசோதனை கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை!

Friday, February 1st, 2019

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை பரிசோதனை செய்யும் நிலையங்கள் தமது சேவைக்கான கட்டணங்களை அதிகரிக்க உத்தேசித்துள்ளன.

இதன்கீழ் அந்த நிலையங்கள், தமது சேவைக்காக 10 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் தற்போது லாப் மற்றும் தெ ட்ரைவ் கிரீன் ஆகிய நிலையங்கள் வாகன புகைப்பரிசோதைனையை மேற்கொண்டு வரும் பிரதான நிலையங்களாக இயங்கி வருகின்றன.

தமது சேவைகளுக்காக ஏற்பட்டுள்ள பல்வேறு செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நிதியமைச்சு இதுவரைக்கும் கோரிக்கை தொடர்பில் பதில் எதனையும் வழங்கவில்லை.

Related posts: