வாகன சாரதிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்க நடவடிக்கை!

Saturday, November 7th, 2020

வாகன சாரதிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து வாகனங்களுக்கான அபராதத் தொகையை செலுத்துவதற்கு மேலதிகக் காலத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க கொரோனா பரவல் காரணமாக அலுவலகப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாளின் பின்னர் அபராதத்தை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய மூடப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் தபாலகங்களும் மூடப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0100

Related posts: