வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !

வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களைப் பதிவு செய்யும்போது வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளமையால், புகைப்பரிசோதனை மற்றும் வருடாந்த வருமானவரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக அமைந்துள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான வாகன உரித்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் வாகன இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளதால், சேவை பெறுநர்களும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
அத்துடன் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுவதால், திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தின் மூலம் சரியான வகையில் தனித்துவத்தை அடையாளங் காணக்கூடிய வசதிகள் உண்டு.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|