வாகன இலக்கத்தகடுகளை 31 ஆம் திகதிக்கு முன் பொறுப்பேற்கவும் – யாழ்.போக்குவரத்து திணைக்களம் !
Thursday, November 23rd, 2017
யாழ்.மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கிளையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகன இலக்கத்தகடுகள் இன்றுவரை உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்படாமல் உள்ளன.
உரியவர்களால் பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத்தகடுகளின் விபரங்கள் 2016.10.01 ஆம் திகதியிலிருந்து 2017.11.09 வரை கிடைக்கப்பெற்ற வாகன இலக்கத்தகடுகளின் விபரங்களை பிரதேச செயலகங்களிலும் மாவட்ட செயலக மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்திலும் பார்வையிட முடியும்.
அதற்கமைய வாகன இலக்கத்தகட்டிற்கு விண்ணப்பித்து இதுவரை குறித்த வாகன இலக்கத்தகட்டினை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் 2017.12.31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துக் கிளையில் தமது வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை மற்றும் வாகனத்தின் பழைய இலக்கத்தகடுகள் என்பவற்றைச் சமர்ப்பித்து தமது வாகனங்களின் இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|