வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, December 12th, 2020

இலங்கையில்வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தேசிய காரணங்களை முன்னிலைப்படுத்தியே, வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால், வாகன சந்தைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அதனால், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: