வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Saturday, June 26th, 2021இரண்டு வருடங்களுக்கு வாகன இறக்குமதியை தடை செய்யும் வகையில் எட்டப்பட்ட தீர்மானத்தை, அவ்வாறே நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெலவில் உள்ள மைக்ரோ வாகன உற்பத்தி தொழிற்சாலையின் ஆய்வு சுற்றுப்பயணத்தின் பின்னர் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்ய பல நிறுவனங்களை மீண்டும் ஊக்குவிக்க தற்போதைய அரசாங்கத்தால் முடிந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.
அது தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உள்நாட்டில் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
வாகனங்களின் சில உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், சில உதிரிபாகங்கள் மாத்திரமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|