வாகனம் தடம்புரண்டதில் சிறுவர்கள் உட்பட 19 பேர் படுகாயம்!
Thursday, August 18th, 2016
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இன்று மதியம் இடம் பெற்ற விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உற்பட 19 பேர் காடமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மதவாச்சி பிரதான வீதி தள்ளாடி-திருக்கேதீஸ்வ ஆலாய வீதிக்கிடையில் இன்று மதியம் 12 மணியளவில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து குஞ்சுக்குளம் பகுதிக்கு பட்டா ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பிரண்டு விபத்திற்குள்ளாகியது.இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த மன்னார் சாந்திபுரம் மற்றும் மட்டக்குழி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த உறவுக்காரர்களான 19 பேர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 16 பெண்களும், 3 ஆண்களும் அடங்குகின்றனர். 2 1/2 மற்றும் ,5, வயதுடைய சிறுவர்களும் அடங்குகின்றனர். விபத்து இடம் பெற்ற பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலைய வீதிபோக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|