வாகனம் செலுத்தும்போது சாரதியின் கையில் கைபேசி இருந்தால் வாகனச் சாரதிப் பத்திரம் பறிமுதல் – இன்றுமுதல் நடைமுறை எனவும் அறிவிப்பு!

Saturday, May 23rd, 2020

வாகனம் செலுத்தும்போது, ஒருவர் ஏதாவது ஒரு வீதி விதி மீறல் செய்யும் போது, அவரது கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக அந்நபரது வாகனச் சாரதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படும் என சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக, சமிக்ஞை விளக்கைப் போட மறந்தால் வீதியிலுள்ள தொடர் கோட்டைக் கடந்தால், அல்லது வேக்கட்டுப்பாட்டை மீறினால், பாதசாரிக்கு வழிவிட மறுத்தல், அல்லது மிகவும் ஆபத்தாக ஒரு வாகனத்தை முந்துதல் போன்ற குற்றங்களின் போது, சாரதிகளின் கையில் கைபேசி இருந்தால், அவர்களது வாகனச் சாரதிப்பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

அந்தக் கணத்திலிருந்து அவர்கள் வாகனத்தைச் செலுத்த முடியாது. வேறு யாரையும் அழைத்தே வாகனத்தைக் கொண்டு செல்ல முடியும்.

அத்தகைய குற்றத்துக்காக முதற்கட்டமாக 72 மணித்தியாலங்களிற்குத் வாகனச்சாரதிப்பத்திரம் தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைக்கு கைபேசியினால் நடக்கும் விபத்துக்களில் மரணங்களும் படுகாயங்களும் மிகவும் அதிகமானவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதிவிபத்துக்களில் பெரும்பாலானவை, வேக்கட்டுப்பாட்டு மீறலாலும், கைபேசியாலுமே நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: