வாகனப் பதிவு நடவடிக்கைகளில் மிகப்பெரும் மோசடி!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகனங்கள் பதிவுக்கு உட்படுத்தப்படும் போது பல மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களத்தின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நேற்று(09) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கக் கட்டணங்களுக்கு மேலதிகமாக ஆயிரம் ரூபா அறவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வாகன விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள், வாகன விற்பனை முகவர்கள் ஆகியோரிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 600,000 ரூபா வரையில் பணம் பெற்றுக் கொள்ளப்படுவதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படும் ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் 800 ரூபா கப்பமாக பெற்றுக்கொள்ளப்படுவதாகவும், முச்சக்கர வண்டிகள் முதல் அதி சொகுசு வாகனங்கள் வரையில் வாகனப் பதிவிற்கு இவ்வாறு கப்பமாகவும், லஞ்சமாகவும் பணம் அறவீடு செய்பய்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|